மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகை தரும் மின்னம்பலம் வாசகர்களை ஊக்கப்படுத்தும்விதமாக ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டுவருகிறது.

தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலத்தின் புத்தகங்கள் சென்னைப் புத்தகக் காட்சியின் அரங்கு எண் 379இல் இடம்பெற்றுள்ளன. நாளுக்கு நாள் நமது அரங்கை நாடி வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாசகர்களை ஊக்குவிக்கும்விதமாக நடத்தப்படும் ஸ்மார்ட்போன் பரிசு திட்டத்தில் பங்குபெற வாசகர்கள் மின்னம்பலம் அரங்குக்கு வருகை தருவதே போதுமானது இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. நேற்று (ஜனவரி 19) நடைபெற்ற குலுக்கலில் திரு.பாலசுப்ரமணியன் MI 5A மாடல் ஸ்மார்ட்போனைத் தட்டிச்சென்றார். இவர் விழுப்புரம், அசோகபுரியில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வருகிறார்.

இந்த பரிசை லஞ்ச ஒழிப்புத் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற உயர்திரு நடராஜன் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார். திருச்சி காவேரி ஃபுட் ப்ராடக்ட்ஸ் கிராமிய நாட்டு மரச்செக்கு எண்ணெய் நிறுவன உரிமையாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் இந்த ஸ்மார்ட்போன் பரிசை வழங்கினார்.

இன்றைய குலுக்கலில் வெல்வது நீங்களாகவும் இருக்கலாம்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 20 ஜன 2018