வேலைவாய்ப்பு: என்டிபிசியில் பணி!


நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்டிபிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூடிவ் ட்ரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 150
பணியின் தன்மை: எக்ஸிகியூடிவ் ட்ரெய்னி
கல்வித் தகுதி: பிஇ (எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மைனிங்)
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: கேட் 2018 தேர்வு, எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.150/- மற்ற பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி: 31.01.2018