மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

சுஷ்மாவுக்காக நிறுத்தப்படும் தரிசனம்?

சுஷ்மாவுக்காக நிறுத்தப்படும் தரிசனம்?

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வழிபாடு நடத்துவதற்காக, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த அறிவிக்கப்படாத தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காரைக்காலில் நேற்று (ஜனவரி 19) தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சேவை மையத்தை தொடங்கி வைத்த சுஷ்மா சுவராஜ், நிகழ்வு முடிந்து நேற்றிரவு காரைக்காலிலேயே தங்கினார். இன்று (ஜனவரி 20) சனிக்கிழமை என்பதால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் வழிபாடு நடத்துகிறார்.

பக்தர்களின் வழிபாட்டுக்காக திருநள்ளாறு கோயிலில் தினமும் காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், சுஷ்மாவின் வருகையை முன்னிட்டு காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்களுக்கு வழிபாடு நடத்த அறிவிக்கப்படாத தடையை திருநள்ளாறு கோயில் நிர்வாகம் விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 9 மணிக்கு முன்பு வர இருந்த லோக்கல் விஐபிக்களுக்கு 9 மணிக்கு பிறகு வருமாறு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாம்

முன்னதாக நடைபெற்ற பாஸ்போர்ட் சேவை மையத்தின் தொடக்க விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு பேசிய சுஷ்மா, “மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும்” என்று கூறினார். அவரிடம் இலங்கை சிறையிலுள்ள காரைக்கால், தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்று மீனவக் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 20 ஜன 2018