மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

பழிதீர்க்க துடிக்கும் இங்கிலாந்து!

பழிதீர்க்க துடிக்கும் இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஷஸ் தொடரை விளையாடியது. அதில் இங்கிலாந்து அணி 4-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், நேற்று (ஜனவரி 19) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஷஸ் தொடரிற்கு பின்னால் நடைபெறும் போட்டி என்பதால் இதில் ஆஸ்திரேலிய அணியை பழிதீர்க்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த (ஜனவரி)14 ஆம் தேதி முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஆரோன் பின்ச் சதம் அடித்து அணியின் ஸ்கோரினை உயர்த்தினார். ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை சேர்த்து 9 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 2 ரன் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்னர் நிலைத்து நின்று விளையாடிய ஜானி ப்ரிஸ்டவ் (60) மற்றும் அலெக்ஸ் ஹால்ஸ் (57) ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

அவர்கள் ஆட்டமிழந்த பின்னர் சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிலைத்து நின்று விளையாடிய ஜோ ரூட் 46 ரன்கள் சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய கிறிஸ் வோக்ஸ் 27 பந்துகளில் 39 ரன்களைச் சேர்த்தார். இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 20 ஜன 2018