மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

ராஜாஜி மேல் கோபம் வராதது ஏன்?

ராஜாஜி மேல் கோபம் வராதது ஏன்?

"ஆண்டாளை பற்றி எழுதிய ராஜாஜி மேல் கோபம் வராதாது ஏன்" என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 7ஆம் தேதி தினமணி நாளிதழ் சார்பில் ஆண்டாள் குறித்த நிகழ்வு ஓன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பேசினார். ஆண்டாள் குறித்து அவர் பேசியது சர்ச்சைகுள்ளாகவே பல்வேறு இந்துத்துவ அமைப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வைரமுத்து வருத்தம் தெரிவித்த நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். நேற்று (ஜனவரி 19) நெல்லை ஜவகர் திடலில் பேசிய கி.வீரமணி, "ஆண்டாள் என்ற அவதாரமே கற்பனை, அதை பெரியாழ்வாரே உருவாக்கினார் என்று ராஜாஜி, 'திருவேணி' என்ற ஆங்கில பத்திரிகையில் 1946 செப்டம்பர் இதழில் எழுதியுள்ளார் " என்று சுட்டிக்காட்டி பேசியவர், ஆண்டாளை பற்றி எழுதிய ராஜாஜி மேல் கோபம் வராதது ஏன் கேள்வி எழுப்பினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 20 ஜன 2018