மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

ஆற்றல் துறையில் நிதிப் பற்றாக்குறை!

ஆற்றல் துறையில் நிதிப் பற்றாக்குறை!

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் உற்பத்தி இலக்கை அடைய இந்தியாவுக்கு 125 பில்லியன் டாலர் நிதி தேவைப்படுவதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் வேகமாக வளர்ந்துவரும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் வாழ்கின்ற அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இன்னமும் முழுமையான மின்சார வசதிகள் கிடைத்துவிடவில்லை. இதனால் மின்சாரத்துக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான இலக்கை அடைய 2022ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டிய தேவையுள்ளது என்று மெர்காம் ஆய்வு கூறுகிறது.

இதுகுறித்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்துறையின் செயலாளர் ஆனந்த் குமார் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "இந்தியா தற்போது 60 கிகா வாட் அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்து வருகிறது. இந்த அளவை 2019-20ஆம் நிதியாண்டில் 115 கிகா வட்டாக உயர்த்தவும், 2022ஆம் நிதியாண்டில் முழு இலக்கை எட்டவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்குக் குறைந்தது 125 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 20 ஜன 2018