மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு!

திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு!

நாடு முழுவதும் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குடியரசு தினத்திற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் கடல் மற்றும் எல்லை வழியாக ஊடுருவி குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைப்பதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலைய முன்பகுதி நுழைவு வாயிலில் தமிழக காவல்துறையினர் மற்றும் விமான நிலைய நுழைவு வாயில், பயணிகள் காத்திருப்பு அறை, விமானம் நிற்கும் பகுதி மற்றும் பயணிகள் செல்லும் பகுதி உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கி மற்றும் மோப்ப நாயுடன் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி விமான நிலையத்தில் உள்ள பார்வையாளர் பகுதி நேற்று(ஜனவரி 19) முதல் வரும் 30ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமான நிலையம் மட்டுமின்றி அதிகப்படியான பக்தர்கள் வருகை தரும் பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 20 ஜன 2018