மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 ஜன 2018

ஹெல்த் ஹேமா - கறிவேப்பிலையின் மருத்துவப் பயன்கள்!

ஹெல்த் ஹேமா - கறிவேப்பிலையின் மருத்துவப் பயன்கள்!

“ஏதாச்சும் வேலை ஆகனும்ன்னா மட்டும்தான் வந்து பேசறாங்க பழகுறாங்க ஹேமா..வெறுப்பா இருக்கு” என்று அலுத்துக்கொண்டாள் சினேகிதி ஒருத்தி. பலரும் அதுபோன்றதொரு சூழலைக்கடந்துகொண்டுதான் இருக்கிறோம் அதுபோன்ற நபர்களிடம் சற்று நாம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது இருப்பினும் நம்மால் பிறருக்கு ஆக வேண்டிய சில நல்ல காரியங்கள் இருப்பின் அதற்கு பிரதிஉபகாரம் பார்க்காது செய்து விடவேண்டும். அதற்கான பாராட்டு நமக்கு கிடைக்கவில்லை எனினும் நம்மால் அக்காரியம் சிறப்பாக நடைபெற்று பலர் பயன்பெற்றார்களே என்ற மனமகிழ்வோடு நகர்ந்துவிடலாம். கறிவேப்பிலையைப்போல் தூக்கி எறியத்தான் செய்யும் இந்த சமூகம். ஆம். வாருங்கள் அந்த கறிவேப்பிலையின் பயன்களைப்பற்றி சற்று பார்க்கலாம்.

கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.

தலைமுடி வளரவும், கண்களுக்கு ஒளிதரவும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச் சத்துக்கள் பெரிதும் உதவுகின்றன .

தலைமுடி நல்ல கறுப்பு நிறமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தலைக்கு வைக்கும் எண்ணையுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து பாருங்கள் . நல்ல பலன் கிடைக்கும் .

கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுக்கும் தன்மை கொண்டது.

வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இ‌ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.

மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 20 ஜன 2018