மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

அதிமுக அடிமைப்பெண் மாதிரி!

அதிமுக அடிமைப்பெண் மாதிரி!

அதிமுக அடிமைப்பெண் மாதிரி எத்தனை பிரிண்டுகள் போட்டாலும் 4050 ஆண்டுகள் தொடர்ந்து ஓடும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஆண்டாளை பற்றி பேசியிருந்தார். அவர் பேசியது சர்ச்சைகுள்ளாகவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 19) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "ஆண்டாள் கடவுள், அவரை கோடிக்கணக்கானோர் வழிபட்டு வருகின்றனர். நானும் ஆண்டாளை வழிபட்டு வருகிறேன். எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையில் கருத்து சொல்வது தவறு, எந்த மதத்தை பற்றியும் கருத்து சொல்லாமால் இந்து மதத்தை பற்றி மட்டும் வைரமுத்து பேசியது தவறு" என்றார். மேலும் இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா என்று கேள்வி எழுப்பிய அவர், வைரமுத்து வருத்தம் தெரிவித்து விட்டதால் இந்த பிரச்னையை விட்டுவிடலாம் என்றும் கூறினார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 19 ஜன 2018