மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

நான் போய் சுவரிலா முட்டிக்கொள்வது?: விஷால்

நான் போய் சுவரிலா முட்டிக்கொள்வது?: விஷால்

நடிகர் சிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற தயாரிப்பாளரின் கேள்விக்கு சிம்பு தரப்பில் ரியாக்‌ஷன் வராததற்கு ‘நான் போய் சுவரிலா முட்டிக்கொள்வது’ என்று பதிலளித்துள்ளார் விஷால்.

ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கீ'. காலீஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் இன்று (ஜனவரி 19) நடைபெற்றது. நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

தேனப்பன் பேசுகையில், “வல்லவன் படத்தை சிம்புவை இயக்குநராக வைத்து எடுத்தேன். அதனால் ஏற்பட்ட பிரச்சினை எவ்வளவு என்பது எனக்குத்தான் தெரியும். ஆனால், நான் புகார் அளிக்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது புகார் அளித்திருக்கும் நிலையில், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதை தலைவர் விஷாலிடமே கேட்கிறேன்” என்றார்.

அப்போது விஷால் ஆதரவு தயாரிப்பாளரான ‘வின்னர்’ ராமச்சந்திரன் எழுந்து, “இதைப் பொதுவெளியில் கேட்கக் கூடாது. தயாரிப்பாளர் சங்கத்தில் கேட்க வேண்டும்” என்று கோபமாக பதிலளித்தார். இதனால் ராமச்சந்திரன், தேனப்பன் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 19 ஜன 2018