மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

டோக்கன் சர்ச்சை: தினகரன் விளக்கம்!

டோக்கன் சர்ச்சை: தினகரன் விளக்கம்!

"ஆர்கே நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றது உண்மைதான்" என்று தினகரன் அணியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் கூறியுள்ளார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். தினகரனின் வெற்றி ஆளும் அதிமுக அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தினகரன் வெற்றி பெற்றார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. ஆனால் இதனை தினகரன் மறுத்துவிட்டார்.

இந்நிலையியில் திருச்சி மாவட்டம் முசிறியில் இன்று (ஜனவரி 19) தினகரன் ஆதரவாளர்கள் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன், "ஆர்.கே.நகரில் ஆளும்கட்சியினர் ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுத்த போது, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நம் தரப்பிலிருந்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தனர். அப்போது தான் 20 ரூபாய் டோக்கன் வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது என்றும் அதன்படியே தேர்தலில் வென்றதாகவும் ராஜசேகரன் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது தனக்கு தெரியாது என்று தினகரன் கூறி வந்த நிலையில், சிகிச்சை வீடியோவின் சிப்பை கொடுத்து வெளியிடச் சொன்னதே தினகரன் தான் என்றும் தினகரன் வெற்றிவேலிடம் சிப்பை கொடுத்தபோது தான் அருகில் இருந்ததாகவும் ராஜசேகரன் கூறியுள்ளார்.

இந்த விவாகரம் சர்ச்சையான நிலையில் இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், செயல்வீரர்கள் கூட்டத்தில் தொண்டர்களை உற்சாகபடுத்தவே தான் அப்படி கூறியதாக ராஜசேகரன் தன்னிடம் கூறினார். மேலும் அவர் பேசியது முற்றிலும் தவறானது என்றும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்குமாறு ராஜசேகரனிடம் கூறியுள்ளதாகவும் தினகரன் கூறினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 19 ஜன 2018