மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

காக்கி ரூட்டைப் பிடித்த பரத்

காக்கி ரூட்டைப் பிடித்த பரத்

படத்தின் கதைக்கேற்ப நடிகராகவும் வில்லனாகவும் நடித்துவரும் பரத், தனது அடுத்த படத்திற்காக காக்கி ரூட்டைப் பிடித்திருக்கிறார்.

ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா தம்பியாகக் கொஞ்ச நேரம் வந்து போனாலும் வில்லனத்தனமான கேரக்டரை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படங்களுக்குப் பிறகு கடைசி பெஞ்ச் கார்த்தி, சிம்பா, பொட்டு என மூன்று படங்கள் வெளிவரவிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீசெந்தில் இயக்கிவரும் காளிதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக ஆதவ் கண்ணதாசனும், ஹீரோயினாக மலையாள நடிகை அன் ஷீத்தலும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்த சுரேஷ் மேனன் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

விஷால் சந்திரசேகர் இசையமைக்க, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார். புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இதனைத் தினகரன்-சிவநேசன் இருவரும் இணைந்து தயாரித்துவருகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 19 ஜன 2018