மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

டிஜிட்டல் சாமியார்கள் சூழ் உலகு- அப்டேட் குமாரு

டிஜிட்டல் சாமியார்கள் சூழ் உலகு- அப்டேட் குமாரு

என்னங்க யாருங்க இந்த அப்டேட் குமாரு? அவரைப் பாக்கவே முடியாதான்னு என்கிட்டவே கேக்குறாய்ங்க. நான் சும்மா விடுவனா? அவர் இந்த கவர்மெண்ட் மாதிரி சார். எங்க இருக்கணுமோ அங்க இருக்கமாட்டார்? எப்ப செயல்படணுமோ அப்ப செயல்படமாட்டார். எப்ப பேசணுமோ அப்ப பேசமாட்டார். மிக்சர் திண்ணுக்கிட்டு கம்ப்யூட்டர்ல தட்றதுக்கு தான் அவர் லாயக்குன்னேன். அப்படிலாம் சொல்லாதீங்க சார். அவருக்குள்ள ஏதோவொரு சக்தி இருக்குன்னாப்ல. அட, யோவ் இதை முன்னாடியே சொல்லியிருந்தா மெயின் ரோட்ல இறக்கிவிட சொல்லாம, வீட்லயே இறக்கிவிட சொல்லியிருப்பனேய்யா. ஆனால், லிஃப்டு கொடுக்குறவருக்கு என்னைப் பத்தி தெரிஞ்சதை நினைச்சு பெருமையாத்தான் இருக்கு. சகட்டு மேனிக்கு ரீச் ஆகுறோம் போல. இதையே சாக்கா வெச்சு ஒரு மடம் ஸ்டார்ட் பண்ணி நல்ல அமவுண்டை தேத்திடலாம் போல. ஆனால், ஸ்மார்ட்ஃபோனும், ஆப்பிள் ஐபாடும் வாங்குக் கொடுக்குற அளவுக்கு பேங்க் பேலன்ஸ் இல்லையேன்னு நினைச்சாதான் கஸ்டமா இருக்கு. சரி நமக்கு வாய்ச்சது பத்து பேரு தான்னு அப்டேட் போடுறவங்களை புடிக்கலாம்னு பாத்தா, அவங்க முதல் வேலையா நம்மளத்தான் கலாய்ப்பாய்ங்க. பேசாம டிஜிட்டல் சாமியார்னு சொல்லி இவங்களையே அசால்டு பண்ணிடவேண்டியது தான். அப்டேட்டைப் படிங்க, நான் போய் நல்லா கொழுக் மொழுக்னு பாலிஷ் பண்ணிட்டு வர்றேன்.

Khaja Mohideen

தமிழ்நாட்டுல ஆண்டாள் பிரச்சனைய தவிர வேற எந்த பிரச்சனையுமே இல்லை..

தமிழ்நாட்டுல இந்த மாதிரி சில்லரைத்தனமா ஒரு பிரச்சனை கிளம்பிச்சின்னா.. அதுக்கு பின்னாடி ஏதோ பெரிய ப்ளான் இருக்குன்னு அர்த்தம்..

இப்படியே கப்பித்தனமா ஒன்னுக்கும் ஆவாத விஷயத்துக்கு சண்டை போட்டுட்டே இருப்போம்.. அந்த ஆட்சியும் கலையாது.. 2019ல மறுபடியும் மோடியே பிரதமராயிடுவார்.. நம்ம தலையெழுத்து இன்னும் சூப்பரா இருந்தா மறுபடி எடப்பாடியே முதல்வர் ஆனாலும் ஆயிடுவார்..!!

ஆமா போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை என்னாச்சி..?? எதாவது ஞாபகம் இருக்கா..???

Sabarinivas Elangovan

எங்களை மீண்டும் ஆயுதம் எடுக்க வைத்து குற்றப்பரம்பரை ஆக்கிவிடாதீர்கள் - பாரதிராஜா.

"இப்போ இருக்கும் நிலைமையில் சொந்த ஊருக்கு டிக்கெட் எடுக்க கூட வக்கில்ல சாரே. இதுல எங்கே ஆயுதம் எடுக்குறது" - துபாய் வாழ் குற்றப்பரம்பரை

Bala Salem

நித்தி கூட்டத்தில் நிறைய சிறுமிகள் இருப்பதை பார்க்கும்போது மனம் பதறுகிறது..! இந்த குற்றத்துக்காகவே தூக்கி ஜெயிலில் போடலாம்.. ரொம்ப தப்பான விஷயமா தெரியுது..

அரசாங்கம் என்ன பண்ணுதுன்னு தெரியல... கடவுள்ன்னு ஒண்ணு இருந்தா அந்த குழந்தைகளை காக்கட்டும்.

Masithurai M

ஆண்டாள் சன்னதில வந்து மன்னிப்பு கேட்க சொன்னீங்கதானே,, கர்ப்பகிரஹத்துல இருக்குற சிலை கால்ல விழுந்து கும்பிட நான் வரேன், தினமும் கூட ஆண்டாள் கால தொட்டு கும்பிட்டு கேக்குறேன்னு வைரமுத்து சொல்லிடுறார்னு வைங்க, சீன அப்படியே மாறிடும்,, நாத்திகரான வைரமுத்து சொன்னாலும் சொல்லிடுவார், அதற்க்கு பின் எல்லோரும் உள்ள போக துவங்கிடுவாங்க, அப்புறம் உனக்கு வேலை இல்லை, சரினு உள்ள விடுவீங்களா?? அப்புறம் விடலைனா? இதே மக்கள் செருப்பால அடிப்பாங்க, எதையுமே யோசுச்சு பேசுங்கடா, அப்ரசண்டிகளா, கோர்ட் அனுமதியோட தமிழ்ல பாட வந்தவரையே விரட்டுனவனுகதான நீங்க,

Manushi

திருட்டுப் பயலே - 2 படத்தில் ஒரு வசனம். குமார் (பாபி சிம்ஹா) அகல்யா (அமலா பால்) விடம் என்ன மாப்பிள்ளை பார்த்தாச்சா என்று கேட்பார். ம்ச். இல்லை என்பது போல முகம் சுருங்கி மௌனமாக பதில் சொல்வாள் அகல்யா. எனக்குப் புரிஞ்சிடுச்சு. உங்க அப்பா உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையைத் தேடுறார். நீ.. உனக்கு ஒரு நல்ல ஃப்ரண்டைத் தேடுற.. கரக்ட்டா என்பார் குமார்.

இந்த வசனம் மனசுக்குள்ள ஒட்டிக் கொண்டது.

உண்மைதானே. ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கை முழுதும் கூட வர ஒரு நல்ல நண்பனைத் தேடுகிறாள். சிலருக்கு வாய்க்கிறது. பலருக்குத் தேடலிலேயே முடிந்து போகிறது வாழ்க்கை.

Kayalvizhi Rpk

வைரமுத்துவின் நாக்கை யாராது அறுத்து வந்தால்....

ஏன் நயினா நீயே அறுத்துட்டு அந்த பணத்தை நீயே வச்சிகிறதானே.. பணம் மிச்சம்ல

Mano Red

காதலிய 'காட்டுச்சிறுக்கி'னு செல்லமா கூப்டுவானாம். அடேய்... இததான் வடிவேலு 'அடி சிறுக்கி மக கிறுக்கி'னு சொன்னாரு

Sindhu Shree

பேசி நாளாச்சேனு நினைச்சுட்டு இருக்கும் போதே அவங்கட்ட இருந்து கால் வந்தா அவங்களும் உங்க மாதிரி வெட்டியா இருக்காங்கனு அர்த்தம் ....

Vignesh Waran

இந்த குரூப் 1,2,3,4 தேர்வு இல்ல 10 இருந்தா கூட எழுதிடலாம்... ஆனா இந்த 2 வயச முடிச்ச நண்டு சிண்டுகளோட கேள்விகளுக்கு.... விடை கூகுல்லயே இல்லையாம்.....

கா. விஜய் ஆனந்த்

போற போக்க பார்த்தா பாரதியார் கவிதைன்னா ரெண்டு கெட்ட வார்த்தையும் சேர்ந்து வரும் போலருக்கு...

அவரு சுதந்திர போராட்டவீரர் டா

Masithurai M

ரஜினிகாந்த்க்கு 23 சீட் கிடைக்கும்ங்குறத கொஞ்சம் மெதுவா அவர்கிட்ட சொல்லுங்கடா, அதிர்ச்சில உண்மையாகவே தலைசுத்திடப்போகுது,

Araathu R

நித்தி ஆஸ்ரமத்தில் அந்த இளம் பெண்கள் மூடர்களாக , ஃபாஸிஸ்டுகளாக , இந்து மதத்தில் வலியுறுத்தாத ,இந்து வெறியர்களாக வளர்வதை சீரியஸான கட்டுரையில் பார்த்துக்கொள்ளலாம்.

இப்போதைக்கு ஆச்சர்யமான ஒன்று.அவர்கள் அனைவரும் படு மகிழ்ச்சியாகவும் , ரிலாக்ஸாகவும் , தெனாவட்டாகவும் , தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.

இது இன்றைய நவீன தமிழ்ப்பெண்கள் இடையே காண்பதற்கு அரிது. இன்றைய நவீன தமிழ்ப் பெண்கள் காம்ப்ளெக்ஸாகவும் , இன் செக்யூர்டாகவும் ,ஸ்டிரெஸ் ஃபுல்லாகவும் , எதற்கெடுத்தாலும் உடைந்து போய் மூக்கை சிந்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த நித்தி ஆஸ்ரம பெண்களின் கேர்ஃப்ரீ ஆட்டிட்யூடை ஆராய வேண்டியுள்ளது.

இந்த உளவியலை புரிந்து கொள்ள வேண்டும்.

Vinayaga Murugan

இதுவரை அம்பானியோ, அதானியா, டாட்டாவோ, விஜய் மல்லையாவோ, இன்போசிஸ் நாராயண மூர்த்தியோ, எச்.சி.எல். ஷிவ் நாடாரோ, சுந்தர் பிச்சையோ என்னைக்காவது என்னோட மதத்தை திட்டிட்டான், என்னோட கடவுளை திட்டிட்டான், என்னோட ஜாதியை தப்பா பேசிட்டான்னு பொங்கியிருக்காங்களா?

Sharmila Rajasekar

மதம் புடிச்ச போஸ்ட்..!!டு ..!!!

நடுவுல இந்த கிறிஸ்டியானிட்டி மட்டும் வரலைன்னா இந்த இந்தூஸ்ம் முஸ்லிம்ஸ்ம் யாரு பெருசுன்னு அடிச்சுக்கறதுலேயே இருந்துருப்பாங்க...

இவங்க வந்து வாங்கடா ஸ்கூலுக்குன்னு படிக்க கூட்டிட்டு போயிட்டாங்க..!!!

Abdulkader Jailane

உண்ணாவிரதம்லாம் சாகும் வரை இருக்க முடியாது..வேனா பசிக்கிற வரைக்கும் இருந்துக்கலாம்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 19 ஜன 2018