மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இணைந்த ஈரோடு!

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இணைந்த ஈரோடு!

புதிதாக 9 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ள ஸ்மார்ட்சிட்டி பட்டியலை மத்திய அரசு இன்று (ஜனவரி 19) வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி, "தற்போது ரூ.12,824 கோடி செலவில் 9 நகரங்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.10,639 கோடி மேம்பாட்டு திட்டத்திற்காகவும், ரூ.2,185 கோடி பான் சிட்டி முயற்சிகளுக்காகச் செலவிடப்படவுள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள ஒன்பது நகரங்கள் உட்பட இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூ.2,03,979 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 100 நகரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த உள்ளனர். இத்திட்டத்தில் முதல் கட்டமாக 20 நகரங்கள் கொண்ட பட்டியலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டது. இதுவரை 3 முறை நகரங்கள் தேர்வு நடைபெற்ற நிலையில், இன்று நான்காவது முறையாக ஸ்மார்ட் சிட்டி தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் உட்பட புதிதாக 9 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. முன்னதாக தமிழகத்தின் சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் சிட்டியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 9 நகரங்களின் பட்டியல்:

1. சில்வாசா (குஜராத்)

2. ஈரோடு (தமிழ்நாடு)

3. தியு (குஜராத் அருகே உள்ள தீவு)

4. பீகார்ஷரிப் (பீகார்)

5. பேரெயில்லி (உத்தரபிரதேசம்)

6. இட்டாநகர் (அருணாச்சலபிரதேசம்)

7. மொராதாபாத் (உத்தரபிரதேசம்)

8. சாகரன்பூர் (உத்தரபிரதேசம்)

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 19 ஜன 2018