மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம்?

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம்?

ஆதாயம் தரக்கூடிய பதவியை வகித்த காரணத்திற்காக ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

டெல்லியில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு 7அமைச்சர்கள் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களை சட்டமன்ற செயலாளர்களாக கெஜ்ரிவால் நியமனம் செய்தார். இதையடுத்து வழக்கறிஞர் பிரஷாந்த் பட்டேல் என்பவர், ஆதாயம் தரக்கூடிய பதவியை வகிக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு அளித்தார். தனது மனுவில் அவர் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தார். இதனத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஜர்னைல் சிங் ராஜினாமா செய்ததால், அவர் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டு, மீதமுள்ள 20நபர்களின் மீதான குற்றச்சாட்டுக்கள் மட்டும் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 19) 20எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ‘டெல்லியை சேர்ந்த 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆதாயம் தரும் கூடுதல் பதவி வகித்தனர். அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி வகிப்பதோடு, ஆதாயம் தரும் வேறு ஒரு பதவியையும் வகித்தனர். எனவே, ஆதாயம் தரும் பதவிகளை வகிக்கக் கூடாது என்ற விதியின் கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்யுங்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தகுதி நீக்கம் செய்யும் இறுதி முடிவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எடுப்பார். அப்படி தகுதிநீக்கம் செய்யப்பட்டால், அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 19 ஜன 2018