மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

போக்குவரத்து விதியை மீறிய காவலர்!

போக்குவரத்து விதியை மீறிய காவலர்!

திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்ற நபரைக் காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முனிராஜ், நேற்று (ஜனவரி 18) தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் அவினாசி சாலையிலுள்ள குமார்நகர் வழியாகச் சென்றுள்ளார். அப்போது சிக்னலை மதிக்காமல் திடீரென வேகமாக வந்த காவல்துறை வாகனம் ஒன்று முனிராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் நிலைகுலைந்த முனிராஜ், காவலரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு காவல் வாகனத்திலிருந்து இறங்கிவந்த காவலர் அன்பழகன், முனிராஜைத் தாக்கினார். காவலரின் அராஜக செயலைக் கண்டு அதிர்ந்துபோன முனிராஜ், காவலரைத் திரும்பித் தாக்க முயன்றார். அதற்குள் அங்கிருந்தவர்கள் தடுத்து, காவலர் அன்பழகனை அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து விதியை மீறி விபத்து ஏற்படுத்திவிட்டு, அதைத் தட்டிக்கேட்ட முனிராஜையும் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த காவலர்கள், சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கையளித்ததை அடுத்து அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்குவந்தது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 19 ஜன 2018