மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

அதிவேகம்: முதல் தளத்தில் பாய்ந்த கார்!

அதிவேகம்: முதல் தளத்தில் பாய்ந்த கார்!

அமெரிக்காவில் சாலையில் வேகமாகச் சென்ற கார் ஒன்று, கட்டடத்தின் முதல் தளத்துக்குப் பறந்து சென்று விபத்துக்குள்ளானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஞாயிறு அன்று அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்த கார் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்றபோது சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பில் மோதி அருகில் இருந்த மருத்துவமனை கட்டடத்தின் முதல் தளத்துக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி கட்டடத்தில் மாட்டிக்கொண்டது.

இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடங்கள் போராடி காரில் இருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர். முன்பகுதியில் இருந்தவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 19 ஜன 2018