கைத்தறி நெசவாளர்கள் 5ஆவது நாளாகப் போராட்டம்!

ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு, ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டு நூல் விலையேற்றத்தால் கைத்தறி நெசவாளர்கள், பாவு நூல் சாயமிடும் தொழிலாளர்கள் மற்றும் பாவு வீசும் தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது; மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, பட்டு நூல் விலையேற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து விலைக் குறைப்பு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியே கைத்தறி நெசவாளர்கள் போராடுகிறார்கள்.