மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

கடலின் 'எவரெஸ்ட்' கடந்து சாதனை!

கடலின் 'எவரெஸ்ட்' கடந்து சாதனை!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைப் போன்று மிகக் கடினமானது என்று கூறப்படும், 'கேப் ஹார்ன்' கடல் பகுதியை இந்திய மகளிர் கடற்படையினர் இன்று காலை வெற்றிகரமாகக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்கள். இவர்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க கடல்பகுதிக்கும், அன்டார்டிகா கடல்பகுதியில் உள்ள ஷெட்லேண்ட் தீவுப்பகுதிக்கும் இடையிலான பகுதியே கேப் ஹார்ன் கடல்பகுதியாகும். இந்தப் பகுதி மிகவும் ஆபத்தான மற்றும் கடினமாக கடற்பரப்பை கொண்டதாகும். இந்தக் கடற்பகுதியில் கப்பலை செலுத்திக் கடப்பது என்பது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்குச் சமமான சாதனையாகவே கருதப்படுகிறது. இந்தச் சாதனையை இந்திய மகளிர் கடற்படையினர் சாதித்துள்ளனர்.

சர்வதேச அளவில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தைக் கொண்டு செல்லவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை முழுவீச்சில் செயல்படுத்தவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோவா கடற்பகுதியில் இருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்.வி. தணி கப்பல் புறப்பட்டது. இந்தக் கப்பலில் பயிற்சி பெற்ற பெண் கடற்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் பெண்களாகவே இடம் பெற்றனர். இந்தப் கடல் பயணத்திற்கு 'நவிகா சாகர் பரிகிரமா' எனப் பெயரிடப்பட்டது.

கடந்த 4 மாத பயணத்திற்கு பின், இந்திய மகளிர் கடற்படையினர் இன்று காலை 6 மணி அளவில் வெற்றிகரமாக கேப் ஹார்ன் கடற்பகுதியைக் கடந்தனர். அப்போது கடற்பகுதியை கடந்தபின், இந்திய தேசிய கொடியைப் பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்கள். மேலும் இந்த கடல்பகுதியைக் கடக்கும் போது மணிக்கு 7கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும், கப்பலைச் செலுத்துவது கடினமாக இருந்ததாகவும் இந்திய கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 19 ஜன 2018