மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா!

மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா!

ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது. அதில் மொத்தம் 16 அணிகள், 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன. அதில் பி பிரிவில் உள்ள இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளையும் வென்று காலிறுதி வாய்ப்பினை உறுதி செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஜனவரி 19) நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இன்று காலை தொடங்கிய இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சினைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியதால் ரன் சேர்க்க முடியாமல் திணறினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக மில்டன் சும்பா 36 ரன்களைச் சேர்த்தார். ஜிம்பாப்வே அணி 48.1 ஓவரில் 154 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அனுகுள் சுதாகர் ராய் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவர் இந்தத் தொடரில் இதுவரை 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அதன் பின்னர் 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஹர்விக் தேசை, ஷுப்மன் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய கில் 59 பந்துகளில் 90 ரன்களைச் சேர்த்தார். ஹர்விக் 56 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி 21.4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி அபார வெற்றி பெற்றது. இதனால் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று பி பிரிவு தர வரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. அதிரடியாக விளையாடிய கில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 19 ஜன 2018