மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

ஜிஎஸ்டி: வரி ஏய்ப்பைத் தடுக்க வேண்டும்!

ஜிஎஸ்டி: வரி ஏய்ப்பைத் தடுக்க வேண்டும்!

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் அரசின் வரி வருவாய் குறைவாக இருக்கும் நிலையில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி மேலும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே வருவாய் இழப்பைத் தவிர்க்கும் வகையில் வரி ஏய்ப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு வரித் தாக்கலில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையிலும், வரிக் குறைப்பை வலியுறுத்திய கோரிக்கைகளை ஏற்றும் நவம்பர் 10ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177 பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜனவரி 18ஆம் தேதி (நேற்று) நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மேலும் 29 பொருட்களுக்கும் 53 சேவைகளுக்குமான வரிகள் குறைக்கப்பட்டன. ஜிஎஸ்டிக்குப் பிறகான அரசின் வரி வருவாய் குறைவாக இருந்து வரும் நிலையில் இந்த வரிக் குறைப்பு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த வரிக் குறைப்பு நடவடிக்கையால் அரசுக்கு ரூ.1,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 19 ஜன 2018