மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

கோவாவில் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம்!

கோவாவில் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம்!

வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை வாகனத்தில் பொருத்துவதைக் கண்டித்து, கோவாவில் டாக்ஸி ஓட்டுநர்கள் மாநில அரசுக்கு எதிராக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவா மாநிலத்தின் பனாஜியில், வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்துவது தொடர்பாக மாநில அரசு தங்களை நிர்பந்திப்பதாகக் கூறி இன்று (ஜனவரி 19) நூற்றுக்கணக்கான டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 18,000 டாக்ஸிகள் ஓடாத நிலையில், நூற்றுக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்காக மாநில அரசு, தனியார் பேருந்துகளையும் வாகனங்களையும் இயக்கிவருகிறது.

இந்தப் போராட்டம் குறித்து வடக்கு கோவா டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் லக்ஷ்மன் கொர்கோன்கர், "வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவது தொடர்பாக மாநில அரசின் வற்புறுத்தலை எங்களால் ஏற்க முடியாது. நாங்கள் அந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம். மற்ற மாநிலங்களில் இவை கட்டாயம் இல்லாதபோது இங்கு மட்டும் ஏன் கட்டாயம் ஆக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 19 ஜன 2018