சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் வரும்!


‘வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் மாற்றம் வரும்’ என்று நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தான் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்து வேட்புமனுத் தாக்கலும் செய்தார். ஆனால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண தினகரனுடன் கைகோக்கத் தயார் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் இந்தியா டுடே சார்பில் நேற்று (ஜனவரி 18) நடைபெற்ற நிகழ்வில் விஷால் கலந்துகொண்டார்.
நிகழ்வில் பேசிய அவர், “ரஜினி, கமல் ஆகியோர் தாமதமாக அரசியலுக்கு வந்தாலும், அவர்களின் முடிவு நியாயமானதாகத் தெரிகிறது. இருவரும் களத்தில் இருப்பதால் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதைக் கணிக்க முடியாது. ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் வரும்” என்றார்.