மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

பகல் கனவு காணுகிறார்கள்!

பகல் கனவு காணுகிறார்கள்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்தி ரஜினி, கமல் முதல்வராகிவிடலாம் என்று பகல்கனவு காணுவதாக தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனும் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். அவர், "ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அரசியல் பிரவேசம் பற்றி பேசாத நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அவரின் மறைவிற்கு பின்னர் திடீரென பேசுகிறார்கள் என்றால் அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைகிறார்கள். அது வெறும் பகல் கனவாகத்தான் முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 19 ஜன 2018