மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

நாங்கள் தமிழகத்தின் கடைசி நம்பிக்கை!

நாங்கள் தமிழகத்தின் கடைசி நம்பிக்கை!

”நேதாஜி, அண்ணாவுக்கு கிடைக்காத இளைஞர்கள், இன்று தினகரனுக்குக் கிடைத்துள்ளனர்; நாங்கள் தமிழகத்தின் கடைசி நம்பிக்கை” என்று நேற்று (ஜனவரி 18) டிடிவி.தினகரன் அணி சார்பில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசினார் நாஞ்சில் சம்பத்.

டிடிவி தினகரன் அணி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா ஆரல்வாய்மொழியில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் சம்பத் உட்பட தினகரன் ஆதரவாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர். அப்போது, திராவிட இயக்கத்தை வீழ்த்தத் திட்டமிடுபவர்களுக்கு மோடி அரசு ஆதரவு கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

”திராவிட இயக்கத்தை வீழ்த்த, சிலர் திட்டமிட்டு திரையுலகப் பிரபலங்களை அழைத்து வருகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இப்போதுள்ள இளைஞர்களை ஈர்க்கும் வசீகரம் தினகரனுக்கு மட்டுமே உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜிக்கு கிடைக்காத இளைஞர்கள், 1965ல் அண்ணாவுக்கு கிடைக்காத இளைஞர்கள், இன்று தினகரனுக்குக் கிடைத்துள்ளனர். தமிழகத்தின் கடைசி நம்பிக்கையாக, நாங்கள் களத்திற்கு வந்திருக்கிறோம்.

தமிழக அரசினால் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாட முடியவில்லை. எத்தனையோ தலைவர்கள் திமுகவில் இருந்தாலும், கட்சியின் வளர்ச்சிக்காக எம்ஜிஆரைதான் அறிஞர் அண்ணா பயன்படுத்தினார். அன்று எம்ஜிஆர் பெற்ற வெற்றியை, இன்று தினகரன் பெற்றுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று தினகரன் சொன்னார்; அதனைச் செய்துகாட்டியிருக்கிறார். வெற்றிபெற சின்னம் முக்கியம் அல்ல; செல்வாக்குதான் முக்கியம். தமிழக அரசின் ஆட்சி, எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். அமைச்சர்கள் யாருக்கும் மக்கள் ஆதரவு தரவில்லை. துரோகத்திற்கு நீண்டநாள் விளம்பரம் கிடைக்காது.

எங்களுக்கு பலர் மிரட்டல் விடுக்கின்றனர். இதைக்கண்டு அஞ்ச மாட்டோம். தினகரனுக்காக எதையும் இழக்க, நாங்கள் தயாராக இருக்கிறோம். ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவுதான், இன்றைய மத்திய அரசுக்கு ஏற்படும்” என்றார் நாஞ்சில் சம்பத்.

”பல ஊர்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட, எங்களுக்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை; தமிழக அரசு கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில் செயல்படுகிறது” என்று கூறினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 19 ஜன 2018