மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

கமலின் முதல் போராட்டம்!

கமலின் முதல் போராட்டம்!

பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக கமல்ஹாசன் நற்பணி இயக்கம் உண்ணாவிரதப் போராட்டம் தொடரப்போவதாக அறிவித்துள்ளது.

பட்டாசு தொழிலுக்கு ஆதரவு கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுமட்டுமின்றி ரூ.350 கோடிக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். வேலையில்லாமல் அன்றாட செலவைக் கூட சமாளிக்க முடியவில்லை என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்றுடன் அவர்களது போராட்டம் 25 ஆவது நாளை எட்டியுள்ளது. இருப்பினும் பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் கந்தக பூமியான சிவகாசியில் போராடும் பட்டாசு தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கமல்ஹாசன் நற்பணி இயக்கமும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 21 ஆம் தேதிமுதல் சிவகாசியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. கமல் நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற அரசியல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 19 ஜன 2018