மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

மீண்டு வரும் சிறு நிதி நிறுவனங்கள்!

மீண்டு வரும் சிறு நிதி நிறுவனங்கள்!

பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் தாக்கத்திலிருந்து முழுவதுமாக மீண்டு வர மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் சிறு நிதி நிறுவனங்களுக்கு இன்னும் ஆறு மாத காலமாகும் என்று அத்துறை சார் நிறுவனங்கள் கூறுகின்றன.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி மோடி தலைமையிலான பாஜக அரசால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையால் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் ஒரே இரவில் செல்லாதவையாக்கப்பட்டன. இந்த நடவடிக்கை மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களைக் கடுமையாகப் பாதித்ததாக இத்துறை நிறுவனங்கள் கூறுகின்றன.

மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பாக வியாழக் கிழமை (ஜனவரி 18) மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு, மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் நெட்வொர்க்கின் (எம்.எஃப்.ஐ.என்.) முன்னாள் தலைவர் ரத்னா விஸ்வநாதன் பேசுகையில், "பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்னர் 23 சதவிகிதமாக இருந்த செயற்படா சொத்து மதிப்பு தற்போது 4 சதவிகிதமாக சரிந்துள்ளது. இது மேற்கொண்டு 2 சதவிகிதமாகக் குறையுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் கடன் வசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட மூன்று மாதங்கள் வரையிலும் கடன் வசூல் கடுமையான பின்னடைவைக் கண்டது. 2017 பிப்ரவரியில் நிலைமை 90 சதவிகிதம் மாறியது. அடுத்த ஆறு மாதங்களில் நிலைமை முற்றிலுமாகச் சீராகும்" என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 19 ஜன 2018