மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

சொட்டு மருந்து வழங்கிய தாய், மகள் சுட்டுக்கொலை!

சொட்டு மருந்து வழங்கிய தாய், மகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் நேற்று (ஜனவரி 18) போலியோ சொட்டு மருந்து வழங்கச் சென்ற இரண்டு பெண் ஊழியர்களை (தாய்,மகள்) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 24 லட்சம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து அளிக்கும் போலியோ ஒழிப்பு முகாம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) தொடங்கியது. இம்முகாமின் கடைசி நாளான நேற்று குவெட்டா நகரில் உள்ள ஷால்கோட் பகுதியில், பெண் ஊழியர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இம்முகாமில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவப் பணிக் குழுவினரை நோக்கி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், அந்தக் குழுவில் பணியாற்றிய பெண்ணும், அதே குழுவைச் சேர்ந்த அவரது மகளும் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் அந்த இடத்திலிருந்து தப்பியோடினர். இவ்வாறு பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போலியோ தடுப்பு இயக்கப் பணியாளர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் கருதுகின்றனர். பாகிஸ்தானில் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிப்பதைப் பயங்கரவாத அமைப்புகள் எதிர்த்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 19 ஜன 2018