மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

சோகத்தில் மூழ்கிய தர்மபுரி!

சோகத்தில் மூழ்கிய தர்மபுரி!

இந்திய எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் தர்மபுரியை சேர்ந்த வீரர் சுரேஷ் வீரமரணம் அடைந்தார். இதனால் அவரது சொந்த மாவட்டமான தர்மபுரி மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தாலூக்கா பண்டாரசெட்டிபட்டி கிராமத்தில் ஒரு விவசாயி குடும்பத்திலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க

வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு 1995ஆம் ஆண்டு இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் சேர்ந்தார் சுரேஷ்.

இவருக்கு ஜானகி என்ற மனைவியும், ஆகாஷ் என்ற மகனும் , புன்னகை என்ற மகளும் உள்ளனர். ஜனவரி 17ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு மனைவி மகள், மகனுடன் அலைபேசியில் பேசியுள்ளார்.

“பொங்கலுக்கு வரலாம் என்றுதான் விடுப்பு கேட்டேன் விடுப்பு கிடைக்கவில்லை, உங்களைப் பார்த்து ஆறுமாதமாகிவிட்டது விடுப்பு கிடைத்ததும் வருகிறேன் என்று கடைசியாக பேசியிருக்கிறார்.

அன்று இரவே ரோந்து பணி சென்றுள்ளார் சுரேஷ்.

இரவு சுமார் பத்து மணிக்கு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் அவர் மீது குண்டு பாய்ந்து வீரமரணமடைந்தார் .

அப்போது சக வீரர்கள், குண்டுபாய்ந்த வீரரைத்தூக்கிவந்து

மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பிறகு இரவு 12 மணிக்கு சுரேஷ் குடும்பத்தாருக்கு மரணத்தைப் பற்றி தெரியப்படுத்தியுள்ளனர்.

எல்லை பாதுகாப்பு வீரர்கள் அலுவலகத்திலிருந்து வீரர் சுரேஷின் உடல் ஜனவரி 18ஆம் தேதி காஷ்மீர்விமான நிலையத்திலிருந்து கோவை விமானநிலையம் கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து அவரது தம்பி சுரேஷ், “முதலில் எனது மூத்த அண்ணன் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். தற்போது இந்தியாவைப் பாதுகாக்கப்போன இரண்டாவது அண்ணன் சுரேஷையும் இழந்துவிட்டோம்

தனிமனிதனாக நிற்கிறேன், அண்ணியும் இரண்டு பிள்ளைகளை வைத்து எப்படி காலத்தை கடத்தப்போகிறாரோ” என்று கதறி அழுதார்.

இதைதொடர்ந்து, பண்டாரசெட்டிப்பட்டியில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இறுதிச்சடங்குகளும் செய்யப்பட்டன. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 19 ஜன 2018