மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

டோக்லாம்: இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை!

டோக்லாம்: இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை!

டோக்லாம் விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

இந்திய எல்லையிலுள்ள டோக்லாம் பகுதி குறித்து, இந்தியா மற்றும் சீனாவுக்கிடையே பிரச்சனை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில், டோக்லாமில் சாலை அமைக்கும் பணியில் இறங்கியது சீன அரசு. இதுபற்றிய தகவல் அறிந்ததும், இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், அங்கு பதட்டம் நிலவியது. இரு தரப்பு வீரர்களும், அங்கு 72 நாட்களாக முகாமிட்டு இருந்தனர்.

இந்தியா மற்றும் சீன நாட்டு வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், இரு நாடுகளின் வீரர்களும் எல்லையில் இருந்து திரும்பப் பெறப்பட்டனர்.

கடந்த சில மாதங்களாக, மீண்டும் டோக்லாம் பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், டோக்லாம் பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், ஹெலிகாப்டர் இறங்க உதவும் ஏழு ஹெலிபேட்கள், 10 கான்கிரீட் நிலைகள், ஏராளமான ராணுவ வாகனங்கள் காணப்படுவதை பார்க்க முடிவதாகவும், அங்கு 1,800 சீன வீரர்கள் நிரந்தர முகாம் அமைத்துள்ளதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 19 ஜன 2018