மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

பொருள் மற்றும் சேவைகளின் வரி குறைப்பு!

பொருள் மற்றும் சேவைகளின் வரி குறைப்பு!

ஜனவரி 18ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் 25 பொருட்கள் மற்றும் 54 சேவைகளுக்கான வரி குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லி, "தொழில் புரிதலை எளிதாக்கும் வகையில் ரிட்டன் தாக்கல் மற்றும் இன்வாய்ஸ் அப்லோடிங் ஆகியவற்றை மாதமொரு முறை மட்டுமே செய்யலாம். பழைய கார்கள், பயோ டீசல், சொட்டுநீர்ப் பாசனம், சமையல் எரிவாயு, தையல் உள்ளிட்ட 54 சேவைகள் மற்றும் 29 பொருட்களுக்கான வரியைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு நடைமுறை ஜனவரி 25 முதல் அமலுக்கு வருகிறது" என்றார்.

அரசு தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ' பழைய மோட்டார் வாகனங்கள், பயோ டீசலில் இயங்கக்கூடிய பேருந்துகள் ஆகியவற்றுக்கான வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. வைரம் மற்றும் விலை மதிப்பற்ற கற்களுக்கு 0.25 சதவிகிதமும், தையல் சேவைகளுக்கு 5 சதவிகிதமும் வரி நிர்ணயிக்கப்படுகிறது. உள்நாட்டுத் தொழில் துறையைப் பாதுகாக்கும் விதமாகவும், வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.'

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வெள்ளி 19 ஜன 2018