மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

பன்னீர்- பொன்னார்: பத்து நிமிடங்கள்!

பன்னீர்- பொன்னார்: பத்து நிமிடங்கள்!

சென்னை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீரும், மத்திய அமைச்சர் பொன்னாரும் சந்தித்துப் பேசியது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்திருந்த துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, இன்று (ஜனவரி 19) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரை மரபுப்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெங்கையாவை வழியனுப்பி வைத்தனர்.

வெங்கையா நாயுடு புறப்பட்டுச் சென்றபின்னர், தமிழக முதல்வரும் அங்கிருந்து புறப்பட்டார். அதன் பிறகு துணை முதல்வர் ஓ. பன்னீரும், மத்திய அமைச்சர் பொன்னாரும் விமான நிலையத்திலேயே தனியாக சுமார் பத்து நிமிடங்கள் உரையாடியிருக்கிறார்கள்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 19 ஜன 2018