மணல் குவாரி மீதான தடை உத்தரவு தொடரும்!


மணல் குவாரிகளை 6 மாதங்களில் மூட வேண்டும் எனத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மலேசியாவிலிருந்து தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த நவம்பர் 29ஆம் தேதி தனி நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மலேசியா மணலை விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு கடந்த டிசம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் மணல் தட்டுப்பாட்டை போக்கத் தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.