நகை விற்பனையில் புதிய கட்டுப்பாடு!


6 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை வாங்கும் போது அதன் விவரங்களைச் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் நிதி நுண்ணறிவுப் பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி விவரம் அறிந்த, பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “சர்வதேச அளவில் பல நாடுகளில் நகை உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களுக்கான விற்பனை வரம்பு 10,000 டாலரைத் தாண்டும் போது அதுபற்றிக் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இந்தியாவிலும் அதுபோன்ற கட்டுப்பாட்டை (ரூ.6 லட்சத்துக்கு மேல்) விதிப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த நடைமுறையானது கருப்புப் பண ஒழிப்பு மற்றும் நிதி மோசடியைக் கண்டறிவதில் அமலாக்கத் துறைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். தனிநபர் வருமான வரி விவகாரத்திலும் இக்கட்டுப்பாடு வருமான வரித் துறையினருக்கு உதவியாக இருக்கும்” என்றார்.