அதர்வா-மேகா: கூட்டணி ஆரம்பம்!


அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
அதர்வாவுக்கு இமைக்கா நொடிகள், செம்ம போத ஆகாத படங்கள் வெளிவரவிருக்கின்றன. அதே போல் மேகா ஆகாஷுக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா வெளிவரவிருக்கிறது. இந்நிலையில் இருவரும் இவன் தந்திரன் படத்திற்குப் பிறகு இயக்குநர் கண்ணன் இயக்கி தயாரிக்கும் படத்தில் இணைந்திருக்கின்றனர்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (ஜனவரி 19) நெல்லையில் தொடங்கியது. பூமராங் என்ற பெயரில் உருவாகவிருக்கும் இதன் டைட்டில் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.பாலாஜி, சதிஷ், சுஹாசினி ஆகியோர் நடிக்கின்றனர்.
டார்லிங் 2, அர்ஜுன் ரெட்டி படங்களில் பணிபுரிந்த ராதன் இசையமைக்கிறார். இவன் தந்திரன் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசன்னா இதிலும் பணிபுரிகிறார். நெல்லையைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. மே மாதத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.