மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

வங்கித் துறையில் அந்நிய முதலீடு உயருமா?

வங்கித் துறையில் அந்நிய முதலீடு உயருமா?

தனியார் வங்கித் துறையில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. பொதுத் துறை வங்கித் துறையின் முதலீட்டு வரம்பையும் உயர்த்துவது தொடர்பான பேச்சுகளும் எழுந்துள்ளன.

தற்போதைய நிலையில் இந்தியாவின் தனியார் வங்கித் துறையில் அரசு அனுமதியில்லாமல் 49 சதவிகிதம் வரையிலும், அரசின் அனுமதியுடன் 74 சதவிகிதம் வரையில் அந்நிய நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் தனியார் வங்கிகளுக்கான அந்நிய முதலீட்டு அளவை 100 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், பொதுத் துறை வங்கித் துறையில் தற்போது 20 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அரசு அனுமதியளிக்கிறது. இந்த அளவை 49 சதவிகிதமாக உயர்த்துவதற்கான ஆலோசனையிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகம், தொழில் துறைக் கொள்கை & மேம்பாட்டுத் துறை மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இணைந்து இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 19 ஜன 2018