மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

தோனி தவறவிட்ட வாய்ப்பு!

தோனி தவறவிட்ட வாய்ப்பு!

ஐசிசி 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் (Cricketer of the Year) என்ற பெருமையை விராட் கோலிக்கு வழங்கி உள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஐசிசி சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் என்ற பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதில் 2017ஆம் ஆண்டிற்கான இரண்டு பட்டியலிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் பட்டியலில் இடம் பெற்றது மட்டுமின்றி கேப்டனாகவும் அவர் அதில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (2004, 2007) மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி (2009) ஆகியோர் இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ஐசிசியின் இரண்டு பட்டியலும் இடம் பெற்ற கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

அது மட்டுமின்றி 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிகெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூவரும் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். அவர்கள் வரிசையில் விராட் கோலி இந்த விருதைப் பெற்றுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்ற உதவியது மட்டுமின்றி பல்வேறு கோப்பைகளைக் கைப்பற்ற உதவியவர் என்றபோது, அவர் இந்த விருதினை ஒருமுறைகூடப் பெற முடியாமல் போனது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 19 ஜன 2018