பட்ஜெட்டில் வருமான வரி ரத்தாகுமா?


2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே பாஜக கட்சியைச் சேர்ந்த பலர் தனிநபர் வருமான வரிச் செலுத்தும் நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆர்த்கிராந்தி அமைப்பின் நிறுவனரும் பொருளாதார நிபுணருமான அனில் போகில் உள்ளிட்ட பலர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதுபோன்ற சூழலில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட் (2018-19) அறிக்கையில் வருமான வரி நடைமுறையை நீக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.