மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

விஜய், ரஜினியை இணைத்த ராகவா லாரன்ஸ்

விஜய், ரஜினியை இணைத்த ராகவா லாரன்ஸ்

காஞ்சனா சீரிஸின் அடுத்த பாகத்தை இயக்கிவரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ரஜினி, விஜய் படங்களின் தலைப்பில் அமைந்த புதிய படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார்.

மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா ஆகிய இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகப் பெரிதாகக் கைகொடுக்காத நிலையில், தற்போது உருவாகிவரும் ‘காஞ்சனா 3’ படத்தை ரொம்பவே நம்பியுள்ளார் ராகவா லாரன்ஸ். வேதிகா, ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும், தன்னுடைய ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் புதிய படமொன்றை எடுக்கவிருக்கிறார் லாரன்ஸ்.

மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இந்தப் படத்துக்கு ரஜினியின் காலா, விஜய்யின் பைரவா ஆகிய இரு படங்களின் தலைப்பை இணைத்து `காலபைரவா’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் தலைப்பே லாரன்ஸ் தந்தது என்று கூறப்படுகிறது. எனவே, அந்தப் பெயருக்கு முன்னால் ரஜினியின் காலா படத்தின் தலைப்பை முன் சேர்த்து காலபைரவா என்ற பெயரில் உருவாக இருக்கிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 19 ஜன 2018