மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

எல்லையில் உயிரிழந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு நிதியுதவி!

எல்லையில் உயிரிழந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு நிதியுதவி!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ்.புரா பகுதியில் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீர மரணமடைந்தவர் தர்மபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் 1995ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து, 78ஆவது பட்டாலியனில் பணியாற்றி வந்துள்ளார்.

சுரேஷின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 19 ஜன 2018