மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதல்ல திமுக!

கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதல்ல திமுக!

‘திமுக கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கட்சி அல்ல, அதிகமான கடவுள் மறுப்பாளர்களைக் கொண்ட கட்சி’ என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று (ஜனவரி 18) கூறியுள்ளார்.

திராவிடர் கழகம் சார்பாக ஜனவரி முதல் வாரத்தில் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்.பி. கனிமொழி, நாத்திகம் என்பது அன்பும் மனிதநேயமுமே என்று பேசினார்.

மேலும் அவர், எம்.பிக்களோடு திருப்பதி சென்றது பற்றி பேசும்போது, “நாங்கள் எம்.பிக்கள் என்பதால் சிறப்பு தரிசனத்துக்காக அழைத்துச் செல்லப்பட்டோம். கடவுளின் முன் எல்லாரும் சமம் என்கிறார்களே அது பொய். அதிக காசு கொடுத்து டிக்கெட் வாங்கினால் சிறப்பு தரிசனம். இல்லையென்றால் பத்து மணி நேரம் நிற்க வேண்டும். நாங்கள் உள்ளே நிற்கும்போது இன்னொரு எம்.பி, ‘இத்தனை ஆயிரம் பேர் கடவுளைப் பார்க்க காத்திருந்து வருகிறார்கள். அவர்கள் கேட்டதையெல்லாம் கடவுள் கொடுக்கிறார். ஆனால், நீ எப்படி கடவுளை நம்பாமல் இருக்க முடியும்?’ என்று என்னிடம் கேட்டார்.

நான் திரும்பிக் கேட்டேன். ‘கடவுளின் கண்ணில்படும் அளவுக்கு இதோ ஓர் உண்டியல் இருக்கிறதே... அதற்கு துப்பாக்கி ஏந்திய ஆள் பாதுகாப்பு கொடுக்கிறார். கடவுள் இந்த உண்டியலைப் பாதுகாப்பார் என்று கடவுள் நம்பிக்கையுள்ள உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால், நான் எப்படி நம்புவது?’ என்று கேட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.

கனிமொழியின் இந்தப் பேச்சைப் பல்வேறு இந்துத்துவ அமைப்பினரும் கடுமையாக எதிர்த்த நிலையில், பாஜகவைச் சார்ந்த ஹெச்.ராஜா, “கனிமொழி திருப்பதி மேல் கை வைத்துவிட்டார். இப்படித்தான் அவரது தந்தை கருணாநிதி தொடர்ந்து கடவுளைத் தாக்கிப் பேசிவந்தார். அதனால்தான் இப்போது அவரால் பேசவே முடியவில்லை” என்று விமர்சித்தார்.

இந்த நிலையில் கவிஞர் ஆரூர் புதியவன் எழுதிய, ‘சொற்களால் ஒரு சுதந்திரப் போர்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஜனவரி 11ஆம் தேதி பேசிய கனிமொழி, “கடவுளை மறுத்துப் பேசியதால்தான் தலைவர் இப்போது பேச முடியவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். தலைவருக்கு டிரக்யாஸ்டமி செய்யப்பட்டிருப்பதால் இப்போது பேச முடியவில்லை. தலைவரிடம் ‘கடவுள் இருக்கிறாரா இல்லையா?’ என்று கேட்டேன். அவரால் பேச முடியவில்லை. இருப்பினும், தலையை இருபக்கமும் ஆட்டி ‘இல்லை இல்லை’என்றார். ஆம்... அந்த மனிதருடைய மௌனமும் நாத்திகம் பேசும். எனக்கு அகம்பாவம் என்கிறார்கள். ஆம். அவருக்கு மகளாகப் பிறந்த அகம்பாவத்தில்தான் பேசுகிறேன். நாங்கள் நாத்திகம் பேசுவதை நிறுத்தப் போவதில்லை” என்று ஹெச்.ராஜாவுக்குப் பதிலடி கொடுத்திருந்தார்.

தொடர்ந்து நாத்திகம் பேசுவேன் என்று கனிமொழி கூறியது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. தேர்தல் பாதைக்கு வந்த அண்ணா, “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை தானே முன்வைத்தார்” என்று திமுக தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 18) இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக கல்வி குறித்தான கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கனிமொழி எம்.பி மற்றும் பத்திரிகையாளர்கள் மாத்தூர் பாண்டாக்கர், ராஜீவ் சேதி, பிரபு சாவ்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 19 ஜன 2018