மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

மெகா ஈவென்ட்: குடும்பத்துக்கான படம் இது இல்லை!

மெகா ஈவென்ட்: குடும்பத்துக்கான படம் இது இல்லை!

‘ஒரு திரைப்படத்தின் இயக்குநர் இப்படியெல்லாம் சொல்லலாமா? இது படத்தின் வசூலைப் பாதிக்காதா?’ என்கிற பழைய கதையையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஹர ஹர மகா தேவகி படத்துக்குக் கிடைத்த வரவேற்புதான் இத்தனை வேகமாக ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை உருவாக்க வைத்திருக்கிறது. அதிலும், 23 நாள்களில் இந்தத் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். அதே இயக்குநர் மற்றும் டெக்னிக்கல் குழுவை வைத்து கஜினிகாந்த் திரைப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள். பகலில் கஜினிகாந்த், இரவில் முரட்டுக்குத்து என இரு படங்களும் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தானோ என்னவோ, அதன் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா இவற்றின் விழாவையும் ஒரே மேடையில் வைத்தார். ஒரு தயாரிப்பாளராக அதனுடன் சேர்த்து தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சக்சஸ் மீட் மற்றும் பாகமதி திரைப்படத்தின் இசை வெளியீட்டையும் நடத்தி பணத்தை மிச்சப்படுத்தியிருக்கிறார். இப்படி நான்கு விழாக்கள் நடத்தப்பட்ட மேடையில் நடந்தவற்றையே இங்கு பார்க்கப்போகிறோம். முதல் கட்டமாக நடைபெற்ற கஜினிகாந்த் திரைப்படத்தின் முதல் பாடல், இருட்டு அறையில் முரட்டுக்குத்து (இனி IAMK என்று அழைப்போம்) படத்தின் இரண்டாவது பாடல் ஆகியவற்றைப்பற்றிப் பார்ப்போம்.

இரண்டு படங்களுக்கும் ஒரே இயக்குநர் என்பதால் இரண்டு தரப்பிலிருந்தும் ஒரே மாதிரியான பேச்சுதான் வெளிப்பட்டது. அது, இரவில் ஒரு ஷூட்டிங், பகலில் ஒரு ஷூட்டிங் என்று 24 மணி நேரமும் பிசியாகவே இருந்திருக்கிறது டெக்னிக்கல் டீம். இயக்குநரைப் பொறுத்தவரையில் மிகவும் எனெர்ஜிடிக்கானவர் என்று கூறினார்கள். கஜினிகாந்த் படத்தில் நடித்த ஆர்யா, அடுத்து இருட்டு அறையில் முரட்டுக்குத்து போன்ற படத்தில் நடிக்க வேண்டுமென்று கூறினார். இது கிட்டத்தட்ட இவர்களது கூட்டணியில் ஒரு படம் உருவாவதை உறுதி செய்தது.

IAMK படத்தைப் பொறுத்தவரையில் எவ்வித சமரசமும் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள் என்று அவர்கள் பேசியதிலிருந்தே தெரிந்தது. அதிலும், நேற்று வெளியிட்ட ‘லவ் சாங்’ எனும் பாடலின் மூலம் 100% இது உறுதியானது. இந்தப் பாடலை டிவி சேனல்களில் ஒளிபரப்பும் வாய்ப்பே இல்லை. அப்படி எங்காவது பார்த்தால், அந்த இடத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஆனால், அந்த சூழலைத் தவிர யூத், டீனேஜ்களின் பிரைவேட் ஏரியாக்களில் இந்தப் பாடல் தொடர்ந்து ஒலிக்கப்போவது உறுதி. அதிலும், பேச்சுலர் பார்ட்டிகளில் எப்படியெல்லாம் நடனம் அமைக்கப் போகிறார்கள் என்பதை நினைத்தாலே பதற்றமாகிறது. பாடலைப் பார்க்க விரும்புகிறவர்கள் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பார்த்துக்கொள்ளலாம். ஏனென்றால், அங்குதான் சென்சார் இல்லை.

கௌதம் கார்த்திக்கு ஜோடியாக வைபவியையும், மேலும் இரண்டு பெண்களையும் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இது ஒரு ஹாரர் – காமெடி - அடல்ட் திரைப்படம். அதாவது பயமாகவும் இருக்கும்; காமெடியாகவும் இருக்கும்; கிலுகிலுப்பாகவும் இருக்கும் என்கிறார் இயக்குநர். மற்றவற்றை விடவும் ‘மொட்ட’ ராஜேந்திரன், கருணாகரன், மதுமிதா ஆகிய மூவரின் காட்சிகள் அதிகம் புகழப்பட்டது.

படம் ரிலீஸானதும் எனக்கு விவாகரத்து கிடைச்சா அதற்குக் காரணம் டைரக்டர்தான் என்கிறார் கருணாகரன். ராஜேந்திரனுக்கும் எனக்கும் இந்தப்படத்துல நிறைய காட்சிகள் இருக்கு. ரெண்டு பேரும் ரொம்ப கசக்கிப் புழிஞ்சு நடிச்சிருக்கோம். ஆனால், எங்களுடைய காட்சிகளைவிட கருணாகரனுடன் அவருக்கு இருக்கும் காட்சிகள் தான் பேசப்படும் என்கிறார் மதுமிதா.

அப்படி என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் IAMK படத்தில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாதபோது, இது குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமே இல்லை. 18 வயதுக்கு மேற்பட்ட, டீனேஜ்களை மட்டுமே டார்கெட் செய்து அவர்களுக்குப் புரியும் விதத்திலேயே எடுத்திருக்கிறோம் என்று இயக்குநர் சொல்கிறார். எனவே, இந்த நிகழ்ச்சியை ஈவென்ட் என்று சொல்வதைவிட Aவென்ட் என்று சொல்வதே சிறந்தது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 19 ஜன 2018