மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை!

ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை!

‘பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் பழகுவது தொடர்பாக உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும்’ என அறிவித்திருக்கிறார் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். சென்னை பள்ளி மாணவர் நரேந்தர் மரணம் தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு, அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

சென்னை திரு.வி.க. நகரில் செயல்பட்டுவரும் டான்பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார் மாணவர் நரேந்தர். பொங்கல் விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் (ஜனவரி 17) இவர் பள்ளிக்குச் சென்றார். வகுப்பறைக்குச் சென்றதும் மயக்கமடைந்த இவரை, அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மாணவர் நரேந்தர் பள்ளிக்குத் தாமதமாக வந்ததினால், ஆசிரியர் ஒருவர் அவருக்கு தண்டனை அளித்ததாகத் தெரியவந்தது. தகவலையறிந்த மாணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெயசிங் என்பவர் திரு.வி.க. நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக, நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்பு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க பள்ளிகளில் பயிற்சிகள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

“மாணவர்களின் உடலையும் மனதையும் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். அவர்களுக்கு எப்படிப்பட்ட அறிவுரைகளை வழங்கலாம் என்று யோசிக்க வேண்டும். இது தொடர்பாக, ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும். இப்படியொரு சம்பவம் எதிர்காலத்தில் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார் அமைச்சர் செங்கோட்டையன்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 19 ஜன 2018