மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகை தரும் மின்னம்பலம் வாசகர்களை ஊக்கப்படுத்தும்விதமாக ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலத்தின் புத்தகங்கள் சென்னைப் புத்தகக் காட்சியின் அரங்கு எண் 379இல் இடம்பெற்றுள்ளன. நாளுக்கு நாள் நமது அரங்கை நாடி வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாசகர்களை ஊக்குவிக்கும்விதமாக நடத்தப்படும் ஸ்மார்ட்போன் பரிசு திட்டத்தில் பங்குபெற வாசகர்கள் மின்னம்பலம் அரங்குக்கு வருகை தருவதே போதுமானது.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று (ஜனவரி 18) நடைபெற்ற குலுக்கலில் சென்னை, ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பரக்கத்துல்லா, MI 5A மாடல் ஸ்மார்ட்போனை தட்டிச்சென்றார். இந்தப் பரிசைப் பெறுவதற்காக அவர் தனது தாயாரையும் உடன் அழைத்து வந்திருந்தார். பரிசை முன்னாள் அமைச்சரான, மறைந்த நாஞ்சில் மனோகரன் அவர்களின் உதவியாளராக, உற்ற துணையாக இருந்தவரும் நமது மின்னம்பலத்தின் நலம் விரும்பியுமான திரு.சின்னி கிருஷ்ணன் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார். சென்னை முகப்பேரை சேர்ந்த குவால்டெக் என்ஜினீயர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் பொறியாளர் ஜெயசங்கர் அவர்கள் ஸ்மார்ட்போனை வழங்கினார்.

இன்றைய குலுக்கலில் வெல்வது நீங்களாகவும் இருக்கலாம்.

மின்னம்பலம் அரங்கில் பதிப்பக நூல்கள்:

இந்தியப் பொருளாதாரம்: கட்டுக்கதைகள்

ஜெ.ஜெயரஞ்சன்

சோதிடமும் கடைசிப் பக்கம் கிழிபட்ட நாவலும்

அ.குமரேசன்

நாடோடியின் நாட்குறிப்புகள்

சாரு நிவேதிதா

வல்லமை தாராயோ

தமயந்தி

ஜெயலலிதா - வாழ்க்கையும் வழக்குகளும்

அருண் வைத்தியலிங்கம்

ஒரு பொம்மலாட்டத்தின் கதை

ஆரா

முகமூடிகளுக்கு வரலாற்றிடமிருந்து ஒரு சேதி

(அரசியல் விமர்சனக் கட்டுரைகள்)

அரவிந்தன்

ராமானுஜர் - 1,2,3 பாகங்கள்

(வைணவ சூரியனின் வரலாற்றுக் கதிர்கள்)

ஆரா

மின்னம்பலம் சிறப்புக் கட்டுரைகள்

2017

அந்தப் பதினேழு ரன்கள்

சர்ச்சைகள், ஆட்டங்கள், ஆளுமைகள்

(கிரிக்கெட் பற்றிய கட்டுரைகள்)

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 19 ஜன 2018