மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

வந்தாலும் வந்திரும்... இப்படியொரு நிலைமை நம்நாட்டுக்கு.

ஒரு மதுபான தயாரிப்பாளரை டி.வியில பேட்டி எடுக்கிறாங்க.

“வணக்கம் நேயர்களே... இன்றைய பாருக்கு பார்... ச்சீ... நேருக்கு நேர் நிகழ்ச்சியில் மதுபான தயாரிப்பாளரும் டாஸ்மாக் ஆலோசகர் பதவி தனக்கு தர வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக அரசை நச்சரித்துவரும் திரு.அஜய் புல்லையா அவர்கள் வந்து இருக்கிறார்கள்! இனி அவருடன்...”

‘வணக்கம் சார்..!’

‘வணக்கம் தம்பி..!’

‘சார்... இப்ப ஆண்டுக்கு 21 ஆயிரம் கோடி வர்ற டாஸ்மாக் வருமானம், நீங்க அலோசகரா வந்தா இதை விட வருமானம் அதிகரிக்குமா..?’

‘என்ன தம்பி இதைப் போய் வருமானம்னு சொல்றீங்க... அவமானம்னு சொல்லுங்க..!’

‘சார் நீங்க சொல்றது புரியலையே..!’

‘தம்பி... இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் தம்பி..! 21 ஆயிரம் கோடி ரூபாய் எல்லாம்.. ஜுஜுபி..! இது வருமானம் இல்ல அவமானம்..!’

‘சார் நீங்க ஆலோசகரா வந்தா ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்..?’

‘தம்பி எழுதி வெச்சுக்கோங்க... நான் வந்தா ஒரே வருஷத்தில 50 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும்..!’

‘50 ஆயிரம் கோடியா..? எப்படி சார்..?’

‘அதுக்கு தான் தம்பி... 5 அம்ச திட்டம் வெச்சு இருக்கேன்..!’

‘சூப்பர் சார்... எங்கே ஒவ்வொன்னா... சொல்லுங்க..?’

‘திட்டம் 1 - ரம்... பிராந்தி... விஸ்கி... இதெல்லாம் சாஷே பாக்கெட்ல அறிமுகம். எப்படி..?’

‘சார் ஆரம்பமே கலக்கல்! அப்புறம்..?’

‘இனி டாஸ்மாக் மட்டுமில்லாம... மளிகை கடை.. பெட்டி கடையில கூட நம்ம பாக்கெட் கிடைக்கும்..!’

‘ஆஹா சூப்பர்... அப்ப பல சரக்கு கடையிலகூட ‘பல சரக்கு’ கிடைக்கும்..! அப்படி தானே..?’

‘கரெக்ட்டு தம்பி..! இதுக்கு விளம்பர வாசகம்கூட ரெடியா இருக்கு தம்பி..!’

‘என்ன வாசகம் சார்? சொல்லுங்க...’

‘பாக்கெட்டைக் கடிங்க.. படார்னு குடிங்க..! எப்புடி..?’

‘அருமை சார்..! அருமை..!’

‘திட்டம் 2 – குடிக்கிறவங்க ஒரு SMS பண்ணா போதும்..! உடனே சரக்கு டோர் டெலிவரி ஆகும்..!’

‘போங்க சார்... இதுல ஒரு ரிஸ்க் இருக்கு..! போதைல இருக்கிறவன்.. சரக்கு பத்தலைன்னா... எப்படி சார் SMS நம்பரை ஞாபகம் வெச்சுக்குவான்..? இந்த திட்டம் சுமார் தான்..!’

‘தம்பி இவ்வளவு யோசிச்சவன்... அத யோசிக்காம இருப்பேனா..? எந்த போதையிலும் மறக்காத நம்பர்... குடிகாரங்களுக்கு பழகிய நம்பர்.. சிக்ஸ்டி... நைன்டி... அதாவது 6090க்கு SMS! யாரு மறப்பா..?’

‘சார் நான் சி.எம் ஆனா இப்பவே பதவி தந்திருப்பேன்..! சூப்பரோ சூப்பர்..!’

‘திட்டம் 3 - இனி டாஸ்மாக்கைத் தேடி மக்கள் போக வேண்டாம்.. மக்களை தேடி டாஸ்மாக் வரும்..!’

‘புரியலையே சார்..?’

‘தம்பி மொபைல் கோர்ட்... மொபைல் ஹோட்டல் மாதிரி மொபைல் பார்..!’

‘சார் நீங்க கட்சி ஆரம்பிச்சா... சாகுற வரைக்கும் நீங்க தான் முதல்வர்..! சூப்பர் திட்டம் சார்..!’

‘இதுக்குக்கூட விளம்பர வாசகம் இருக்கு தம்பி..!’

‘என்ன சார் அது? சொல்லுங்க...’

‘நாங்க நடமாடுகிறோம்... நீங்க நடனமாடுங்க..! நல்லா இருக்கா தம்பி..?’

‘ஆஹா... சார் பூரா பயலுகளையும் ஆட விட்டு காசை அள்ளுறீங்க போங்க..! அருமை..!’

‘திட்டம் 4 - சரக்கு வென்டிங் மெஷின்..!’

‘அப்படினா என்ன சார்..?’

‘தம்பி பெரிய பெரிய மால், தியேட்டர்... இங்கெல்லாம் போனா பெப்ஸி, கோக் காசு போட்டா வரும். பார்த்து இருக்கியலா..?’

‘ஆமா சார்..!’

‘அதே மாதிரி காசு போட்டா சரியான மிக்சிங்ல பெப்ஸியோட சரக்கு வரும்..! அந்த கம்பெனியோட ஒப்பந்தம் போட்டுக்கிட்டா... மெஷின் செலவு அவனது..! எப்படி..?’

‘சார் நீங்க எங்கேயோ போய்டீங்க..! அருமையான திட்டம் சார்..!’

‘இதுக்குக்கூட விளம்பர வாசகம் இருக்கு தம்பி..!’

‘என்ன சார் அது..?’

‘துட்டை போடுங்க... மட்டை ஆகுங்க...’

‘பொருத்தமான வாசகம் சார்..!’

‘திட்டம் 5 - ஏழை எளியவர்களுக்கு ரேஷன் கடைல மாதம் இருமுறை மானிய விலையில் குவாட்டர் வழங்கும் திட்டம்..! எப்படி தம்பி..?’

‘சூப்பரோ சூப்பர்..! கண்டிப்பா நீங்க வந்தா ஒரே ஆண்டுல 50 ஆயிரம் கோடிய அள்ளி விடுவீங்க..! ரொம்ப நன்றி சார்..! வணக்கம்..!’

இதை குதர்க்கமான ஒருத்தருக்கு அனுப்பிட்டு, பதிலுக்காக வெயிட் பண்ணேன். ஆளும் கொஞ்சம் வெயிட்டான ஆளு.. ‘தன்னை குத்திக்காட்டுற மாதிரியே இருக்கே’ன்னு பொங்குவாருன்னு எதிர்பார்த்தேன்.

வந்துச்சு பாருங்க ஒரு ரிப்ளே..

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 19 ஜன 2018