மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

நாடகமாடுகிறார் பிரவீன் தொகாடியா

நாடகமாடுகிறார் பிரவீன் தொகாடியா

வழக்கு ஒன்றிலிருந்து கைதாவதைத் தவிர்ப்பதற்காகவே பிரவீன் தொகாடியா நாடகமாடுகிறார் என்று குஜராத் போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், ஜனவரி 15ஆம் தேதி அகமதாபாத் நகருக்கு அருகில் சுயநினைவற்ற நிலையில் தொகாடியா மீட்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தொகாடியா, தன்னை என்கவுன்ட்டரில் கொல்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும் மருத்துவர்களின் அனுமதியுடன் விரைவில் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளாதாகவும் தன்னை என்கவுன்ட்டரில் கொல்ல திட்டமிட்டவர்களின் பெயரை வெளியிட உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து அகமதாபாத் காவல் (குற்றப் பிரிவு) இணை ஆணையர் ஜே.கே.பட் நேற்று (ஜனவரி 17) பேசும்போது, பத்தாண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கிலிருந்து கைதாவதை தவிர்ப்பதற்காகவே தொகாடியா இவ்வாறு நாடகமாடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, “பால்டி என்ற இடத்தில் உள்ள விஎச்பி அலுவலகத்திலிருந்து 15ஆம் தேதி காலையில் தனது உதவியாளர் ஒருவருடன் புறப்பட்ட தொகாடியா, தல்டெஜ் பகுதியில் உள்ள கன்ஷ்யாம்பாய் சரண்தாஸ் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது சுயநினைவுடன்தான் இருந்துள்ளார். அங்கிருந்து தொகாடியாவுடன் காரில் புறப்பட்ட சரண்தாஸ், கோடார்பூர் பகுதிக்கு ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். அங்கு காரிலிருந்த தொகாடியாவை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். தொகாடியா நல்ல நினைவுடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 19 ஜன 2018