கிச்சன் கீர்த்தனா: ரசித்துச் சாப்பிட ரவா லட்டு!

தேவையான பொருள்கள்:
ரவை – 1 கப் (200 கிராம்), சர்க்கரை- 1 கப் (150 கிராம்), ஏலக்காய்பொடி – கால் டீஸ்பூன், முந்திரிபருப்பு – 20, கிஸ்மிஸ் – 20, பால் – கால் கப் (25 கிராம்), தேங்காய் துருவல் - சிறிதளவு, நெய் – 75 கிராம்.
செய்முறை:
1. முந்திரியைச் சிறிய சிறிய துண்டாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.
2. ஏலக்காயைப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
3. தேங்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும்.
4. சர்க்கரையை மிக்ஸியில் மாவு போல் திரிக்கவும்.
5. முதலில் ஒரு கடாயில் நெய்விட்டு முந்திரியையும், கிஸ்மிஸ்யையும் வறுத்து எடுக்கவும்.
6. தேங்காய்த் துருவலை நெய் ஊற்றி பொன்னிறமாக வதக்கவும்.
7. நெய் ஊற்றி ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.
8. பாலை சூடான நிலையில் வைத்துக்கொள்ளவும். வறுத்து வைத்த கிஸ்மிஸ், முந்திரி பருப்பு, தேங்காய்த் துருவல், ரவை மற்றும் சர்க்கரை இவை அனைத்தையும் சேர்த்துக் கலக்கவும்.
9. அதில் ஏலக்காய் பொடியைச் சேர்க்கவும். சிறிது பால் தெளித்துக் கொள்ளவும்.
10. இதை நன்றாக கலக்கி சிறு சிறு உருண்டையாக பிடிக்கவும். உருண்டை பிடிக்க வரவில்லை என்றால் சிறது பால் சேர்த்து உருண்டையாகப் பிடிக்கவும்.
11. இப்போது சுவையான ரவா லட்டு ரெடியாகி விட்டது.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்போல் வீட்டுக்கு வருவோருக்கெல்லாம் ரவா லட்டைக் கொடுத்து அசத்துங்கள்.
கீர்த்தனா சிந்தனைகள்:*"
மனைவி என்பவள் நம் மனசாட்சியின் வெப் கேமரா.