மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

இறக்குமதி வரியால் சோலார் உற்பத்தி பாதிப்பு!

இறக்குமதி வரியால் சோலார் உற்பத்தி பாதிப்பு!

சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் தகடுகளுக்கு விதிக்கப்படும் அதிகமான பாதுகாப்பு வரியால் உள்நாட்டு சோலார் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக அத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் சோலார் மின்னுற்பத்திக்குத் தேவையான சோலார் தகடுகள் உள்ளிட்ட உபகரணங்கள் சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்குப் பாதுகாப்பு வரியாக 70 சதவிகிதத்தை மத்திய அரசு விதிக்கிறது. இதனால் ரூ.12,000 கோடிக்கும் மேற்பட்ட சோலார் உற்பத்தித் திட்டங்கள் இக்கட்டான சூழலில் இருப்பதாகக் கிரிசில் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

சோலார் உற்பத்தித் திட்டங்களின் மொத்தச் செலவுகளில் சோலார் உபகரணங்கள் மட்டும் 55 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. இவற்றில் 88 சதவிகித அளவு சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் சோலார் தகடுகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச வரியால் சோலார் திட்டங்களில் பாதிப்பு ஏற்படுவதாக அத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் சோலார் மின் கட்டணத்தை தற்போதுள்ள 3 ரூபாயிலிருந்து (ஒரு யூனிட்) ரூ.3.75 ஆக உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், உற்பத்திச் செலவுகளும் 25 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 19 ஜன 2018