மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 ஜன 2018

சேலையுடன் மாரத்தான்: இந்தியப் பெண் சாதனை!

சேலையுடன் மாரத்தான்: இந்தியப் பெண் சாதனை!

பெங்களூரைச் சேர்ந்த ஜெயந்தி சம்பத்குமார் என்பவர் சேலை அணிந்துகொண்டு மாரத்தான் போட்டியில் ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த ஐ.டி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் ஜெயந்தி சம்பத்குமார் (வயது 44). இவர் சேலை அணிவதை அதிகம் விரும்புவதுடன், பெண்களுக்கு அதை ஊக்குவிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பாரம்பர்ய கைத்தறி ஆடைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து மாரத்தான் போட்டிகளில் சேலை அணிந்து பங்கேற்று வருகிறார். ஆரம்பத்தில் சேலை அணிந்து மாரத்தான் போட்டிகளில் ஓடுவது இவருக்குக் கடினமாக இருந்துள்ளது. பின்னர் தொடர் பயிற்சியுடன் ஆடையில் சிறிய மாற்றங்களைச் செய்து சிறப்பாக ஓடி வருகிறார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற மாரத்தானில் கலந்துகொண்ட ஜெயந்தி, 4 மணிநேரம் 57 நிமிடங்களில் இலக்கைக் கடந்து, சேலை அணிந்து வேகமாக மாரத்தான் ஓடியவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். இதுகுறித்து ஜெயந்தி சம்பத்குமார், “சேலையுடன் ஓடுவது என்பது எளிதான காரியம் அல்ல. இதற்காக 5 முதல் 6 மாதங்கள் வரை பயிற்சி செய்து வருகிறேன். முதலில் மடிசார் மற்றும் மகாராஷ்டிரா முறைப்படி சேலை கட்டி ஓடத் தொடங்கினேன். அதில் பலமுறை கீழே விழுந்துள்ளேன். அதன் பிறகு மடிசார் முறையில் சிறிது மாற்றம் செய்து சேலை கட்டி, ஓடி வெற்றி பெற்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இவர், மும்பையில் வரும் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 19 ஜன 2018