மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

கமல் அறிவிப்பு: கலாம் குடும்பம் வரவேற்பு!

கமல் அறிவிப்பு: கலாம் குடும்பம் வரவேற்பு!

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்குவேன் என கமல் அறிவித்துள்ளதற்கு, கலாம் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமலஹாசன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தாம் பிறந்த ராமநாதபுரத்தில் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கப்போவதாகவும் அங்கிருந்து அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாகவும் அறிவித்திருந்தார். ஆரம்பக்கட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் விகடன் வார இதழில் தனது அரசியல் பயணம் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள கமல், “கலாமுக்கு கனவுகள் பல இருந்தன. அவரைப் போலவே பல கனவுகளை கொண்டவன் நான். திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல; அது நாடு தழுவியது. விமர்சிப்பது மட்டுமே என் வேலையல்ல இறங்கி வேலை செய்ய வந்தவன் நான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலாமின் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 18 ஜன 2018